Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா ஏர்லைன்ஸூக்கு பேஸ்புக்கில் ஒரு மில்லியன் ரசிகர்கள் !

மலேசியா ஏர்லைன்ஸூக்கு பேஸ்புக்கில் ஒரு மில்லியன் ரசிகர்கள் !

713
0
SHARE
Ad

News-Malaysia-Airlines

கோலாலம்பூர் , அக் 17 – மலேசியா ஏர்லைன்ஸ்க்கு பேஸ்புக்கில் ரசிகர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டது.

இந்த வெற்றியை கருத்தில் கொண்டு, மலேசியா ஏர்லைன்ஸ் தனது  சேவையை  மேலும் வலுப்படுத்த இதுபோன்ற  சமூக வலைத்தளங்களில் கூடுதல் கவனம் செலுத்த  முடிவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் தொடங்கி தற்போது வரை 17 நாடுகளில் தங்களது பேஸ்புக் பக்கத்தை மலேசியா ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 600,000 புதிய அனைத்துலக ரசிகர்கள்  மலேசியா ஏர்லைன்ஸ்க்கு கிடைத்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து  மலேசியா ஏர்லைன்ஸ்-யின் விளம்பர பிரிவுத் தலைவர் கைருல் ஷ்யாகர் காலிட் கூறுகையில், “ நாங்கள் எங்களுடைய வியாபாரத்திற்கு  சமூக வலைத்தளங்களை தான் முக்கிய ஊடகமாக பயன்படுத்துகின்றோம்.அனைத்துலக வாடிக்கையாளார்களுடன் சமூக வலைத்தளங்களின் மூலமாக நேரடியான தொடர்ப்பை வைத்துக் கொள்கிறோம். இதுதான் எங்களுடைய நிறுவனத்தின்  வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “எங்களுடைய நிறுவனம் பல வெற்றிகளை அடைய சமூக வலைத்தளங்கள்  பேருதவியாக திகழும் என்பதை நாங்கள் நம்புகின்றோம்” என்றும் கைருல் தெரிவித்துள்ளார்.