Home கலை உலகம் பெயர் மாற்றத்திற்கு பின் 5 படங்களில் நடிகர் விஷ்ணு ஒப்பந்தம்!

பெயர் மாற்றத்திற்கு பின் 5 படங்களில் நடிகர் விஷ்ணு ஒப்பந்தம்!

729
0
SHARE
Ad

1அக் 18- “வெண்ணிலா கபடிக் குழு” படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. அதைத் தொடர்ந்து” நீர்ப்பறவை” உள்ளிட்ட, சில படங்களில் நடித்தார். ஆனால், அவர் நடித்த சில படங்கள் தோல்வியை கண்டது. இந்நிலையில்,  சினிமா துறையில் மாற்றம் பெற வேண்டும் என்பதற்காக விஷ்ணு என்ற தன் பெயரை விஷ்ணு விஷால் என மாற்றி, புதிய தெம்புடன் களமிறங்கியுள்ளார். இந்த மாற்றத்திற்கு பின், ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாம். “இதற்கு பெயர் மாற்றம் தான் காரணம்” என்கிறார்  விஷ்ணு விஷால்.