Home கலை உலகம் கொவிட்-19 செய்திகளுக்கிடையில் கிருஷ்ணா-சுனைனா மற்றும் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா திருமணத் தகவல்கள்

கொவிட்-19 செய்திகளுக்கிடையில் கிருஷ்ணா-சுனைனா மற்றும் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா திருமணத் தகவல்கள்

807
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரைப்பட உலகமே கொவிட்-19 பிரச்சனைகளால் முடங்கிக் கிடக்கும் நிலையில், இரண்டு நட்சத்திர இணைகளின் திருமணத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

கிருஷ்ணா-சுனைனா

நடிகை சுனைனா, தெலுங்கு தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிப் படங்களில் நடித்தவர். இருந்தாலும், முன்னணி நடிகையாக ஜொலிக்கவில்லை. கடைசியாக ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி, பின் 2008-ஆம் ஆண்டு ‘அலிபாபா’ எனும் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. ‘கழுகு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தனின் சகோதரர்தான் நடிகர் கிருஷ்ணா.

கடைசியாக தனுஷுடன் ‘மாரி-2′ படத்திலும், ‘கழுகு-2′ படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் கிருஷ்ணாவும் சுனைனாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ‘வன்மம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

விஷ்ணு விஷால் – ஜூவாலா கட்டா

சில படங்களில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் அண்மையில் நடித்து வெளிவந்த ‘இராட்சசன்’ திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றதோடு, அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அவரது முதல் திருமணம் ஒரு குழந்தையோடு விவாகரத்தில் முடிந்த நிலையில், வாழ்க்கையில் மிகவும் சோர்ந்துபோய் இருந்த விஷ்ணு விஷால் மெல்ல மெல்ல மனம் தேறி, உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து கட்டுமஸ்தான உடலழகுக்கு மாறினார். ஏற்கனவே திருமணமாகி, உறவு முறிந்த நிலையில் இருந்த ஜூவாலா கட்ட என்ற பூப்பந்து வீராங்கனையுடன் விஷ்ணு விழாலுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இப்போது கல்யாணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் நெருக்கத்தைக் காட்டும் புகைப்படங்கள் பகிரங்கமாக அவர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கின்றன.