Home One Line P1 அத்தியாவசிய நடமாட்டங்கள் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்

அத்தியாவசிய நடமாட்டங்கள் 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்

413
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாவது கட்ட அமுலாக்கத்தில் உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் அத்தகைய பயணத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்குள்தான் மேற்கொள்ள முடியும்.

ஏப்ரல் 1 முதல் 14-ஆம் தேதிவரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாவது கட்ட அமுலாக்கம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

உணவு, அன்றாடத் தேவைக்கான பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளிவரமுடியும் என்றும் தேவையில்லாமல் ஒருவருக்கு மேல் காரில் வெளியே வரக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியே ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வெளியே வர வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முன் அனுமதி பெறவேண்டும்.

கீழ்க்காணும் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பட்டியிலிடப்பட்டுள்ளன:

  1. உணவு விநியோகம் அல்லது வாங்குதல்
  2. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது
  3. மருந்துகள்
  4. சிகிச்சை பெறுவதற்காக வெளியே செல்வது
  5. தண்ணீர், மின்சாரம், தொடர்புத் துறை அல்லது இணையம் தொடர்பான அலுவல்கள்
  6. பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொடர்பான அலுவல்கள்
  7. பொது துப்புரவுப் பணிகள் மற்றும் குப்பைகள் அகற்றுதல்
  8. வங்கிகள், நிதி அலுவல்கள்
  9. இணைய வணிக அலுவல்கள்