Home அரசியல் மலாய் வாக்காளர்களை அதிகரிக்க பெர்க்காசாவுடன் சிலாங்கூர் மாநில அம்னோ இணைந்து செயல்படும்

மலாய் வாக்காளர்களை அதிகரிக்க பெர்க்காசாவுடன் சிலாங்கூர் மாநில அம்னோ இணைந்து செயல்படும்

475
0
SHARE
Ad

3584159275_b4328b14ff_b

ஷா அலாம், அக். 19- நாட்டின் 14ஆவது பொதுதேர்தலுக்கு ஆயுத்தமாகும் பொருட்டு மலாய் வாக்காளர்களை அதிகரிக்க பெர்க்காசா அமைப்புடன் இணைந்து சிலாங்கூர் மாநில அம்னோ செயலாற்றவிருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ நோர் பின் ஹாஜி ஒமார் கூறினார்.

இதன் வாயிலாக தற்போது மக்கள் கூட்டணியின் கைவசமிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெர்காசா மட்டுமின்றி மற்ற இனங்களிலிருந்தும் வாக்காளர்களை அதிகரிக்கும் முயற்சிக்கு தேசிய முன்னணியின் உறுப்பு கட்சிகளிடமிருந்து அதிக ஒத்துழைப்பு தேவைப்படுவதாக சிலாங்கூர் மாநில பெர்க்காசா அமைப்பின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின் தமதுரையில் அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூரில் 49 விழுக்காடு மட்டுமே மலாய் வாக்காளர்கள் உள்ளனர். ஏனையவர்கள் இதர இனங்களைச் சார்ந்த வாக்காளர்களாவர். இவ்வாண்டுக்குள் தேசிய முன்னணியிலுள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும் தங்களது கட்சி தேர்தல்களை முடித்த பின்னர், அடுத்த ஆண்டு முதல் தேசிய முன்னணிக்கு வாக்காளர்களை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என டத்தோஸ்ரீ நோர் பின் ஹாஜி ஒமார் மேலும் சொன்னார்.

இதனிடையே, இந்நிகழ்வில் பெர்க்காசாவின் தலைவர் டத்தோ இப்ராஹிம் அலி கூறுகையில் மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சிறப்பு செயற்குழுவை பெர்க்காசா அமைத்துள்ளதாக கூறினார். தற்போது, நாடு தழுவிய நிலையில் கிட்டத்தட்ட 25 இலட்சம் வாக்காளர்கள் தங்களை இன்னும் வாக்காளர்களாக பதிந்துக் கொள்ளாமல் உள்ளனர். சிலாங்கூர் மாநிலத்திலுள்ள மலாய்க்காரர்களை வாக்காளர்களாக பதிந்துக்கொள்வதற்கான முயற்சியை பெர்க்காசா மேற்கொள்ள வேண்டும் என டத்தோ இப்ராஹிம் அலி கட்டளையிட்டார்.