Home வாழ் நலம் முருங்கையின் மகிமை

முருங்கையின் மகிமை

684
0
SHARE
Ad

ht342

அக் 19- நமது நாட்டின் தாவரச் செல்வங்களை நாம் சிறப்பாகக் கருதாவிட்டாலும், மற்ற நாடுகள் அதன் மகத்துவம் அறிந்து பயன்படுத்துகின்றனர். முருங்கையின் தாயகம்  இந்தியாதான் என்றாலும், இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு அதிகம். அங்கு முருங்கை வளர்ப்பதை ஒரு  இயக்கமாகவே கொண்டுள்ளனர்.

குறிப்பாக தாய்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துகளை குறைந்த செலவில் எளிதாக அளிக்க முருங்கைக் கீரையை பெருமளவில்  பயிரிடுகின்றனர். இக்கீரை 300 வித நோய்களை குணப்படுத்துவதாகவும், நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்துவதாகவும்  கண்டறிந்துள்ளனர். உடலை உறுதி செய்வதில் முருங்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

#TamilSchoolmychoice

100 கிராம் முருங்கை இலையில்…

ஆரஞ்சில் இருப்பதைவிட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது.

கேரட்டில் இருப்பதைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது.

பாலில் இருப்பதைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.

பாலில் இருப்பதைவிட 2 மடங்கு புரோட்டீன் உள்ளது.

வாழைப்பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது.

பசலைக்கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து உள்ளது.