கோலாலம்பூர், அக். 21- மத்திய அரசாங்கத்தில் இடம் பெறாததுடன் அமைச்சரவையில் பதவிகள் ஏற்க மாட்டோம் என நேற்று நடைபெற்ற மசீச சிறப்பு பொது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பேரவையில் மத்திய அமைச்சரவையில் மசீச இடம்பெறக்கூடாது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுமார் 2,119 பேராளர்கள் கலந்துக்கொண்ட இப்பேரவையில் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 1,090 பேரும் அதற்கு எதிராக 1,080 பேரும் வாக்களித்தனர். 18 வாக்குகள் செல்லுபடியாகவில்லை.
ஆயினும், செனட்டர் பதவிகள், அரசு சார்பு நிறுவனங்களில் பதவிகள், மாநில அரசாங்கத்தில் பதவிகள், கிராமத் தலைவர் பதவிகள் முதலானவற்றை ஏற்றுக்கொள்ளும் 2 தீர்மானங்களை மசீச பேராளர்கள் ஆதரித்தனர்.
நடந்து முடிந்த 13ஆவது பொதுத்தேர்தலில் மசீச மோசமான நிலையில் தோல்வியைக் கண்டதால் மத்திய அரசாங்கத்தில் இடம்பெற மாட்டோம் என இதற்கு முன்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.