Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மற்றும் மேக் செயலிகள் இன்று அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மற்றும் மேக் செயலிகள் இன்று அறிமுகம்!

594
0
SHARE
Ad

overview_hero

கோலாலம்பூர், அக் 23 – உலகின் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் மாத ஊடக நிகழ்வு இன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு பசுபிக் நேரப்படி காலை 10 மணிக்கும், கிழக்கத்திய நேரப்படி 1 மணிக்கும் தொடங்கவுள்ளது.

#TamilSchoolmychoice

ilife-iwork-bannerஆப்பிள் நிறுவனம் இந்நிகழ்வில் தனது புதிய தயாரிப்புக்களான ஐபாட், புதிய ரெட்டினா மேக்புக் செயலிகள் மற்றும் புதிய ஐலைப், ஐ வொர்க் மென்பொருள்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

Mac-OS-X-Mavericks-Logo (1)அதேநேரத்தில் மாற்றியமைக்கப்பட்ட மேக் செயலி (Mac Pro) மற்றும் மேக் செயலியின் புதிய இயக்க முறைமை  (OS X Mavericks) ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் இந்நிகழ்வை மேக் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்கள், ஆப்பிள் டிவி என அனைவருக்கும் தங்களது வலைத்தளத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.