வாஷிங்டன், அக் 23– பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் அமெரிக்க சென்றுள்ளார். வெளியுறவுத்துறை மந்திரி ஜான்கெர்ரியை சந்தித்து பேசினார். நேற்று அமெரிக்க சமாதன நிறுவனத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அப்போது பாகிஸ்தானில் அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாட்டு தலைவர்களும் சுமார் 90 நிமிட நேரம் சந்தித்து பேசுகின்றனர்.