Home இந்தியா இந்தியா–சீனா எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம்: மன்மோகன்சிங் முன்னிலையில் இன்று கையெழுத்தானது

இந்தியா–சீனா எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம்: மன்மோகன்சிங் முன்னிலையில் இன்று கையெழுத்தானது

583
0
SHARE
Ad

M_Id_431864_Indo-China_talks

பெய்ஜிங், அக் 23– ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று சீன தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவரை சீனா வெளியுறவு துணை மந்திரி ஷாய் ஆன் வரவேற்றார்.

இன்று சீன பிரதமர் லீ கெஹியாங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் நட்புறவு குறித்து விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து இந்தியா–சீனா இடையேயான எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

பின்னர் பிரதமர் மன் மோகன்சிங்கும், சீன பிரதமர் கெஹியாங்கும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி கொண்டனர். அதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

சீன பிரதமர் லீகெஹியாங் கூறும் போது பைலின் புயலின் போது வங்காள கடலில் தத்தளித்த 19 சீன பயணிகளை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் பிரதமரானவுடன் எனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு சென்றேன்.

இந்தியாவுடன் சிறந்த நட்புறவு தொடரும் என நம்புகிறேன். எங்களது பேச்சு வார்த்தையின் போது அரசியல் உறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தோம். உயர் மட்ட அளவிலான சந்திப்புகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா– சீனா இடையே எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் இரு நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளோம் என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் கூறும் போது பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளிடையேயான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா– சீனா இடையே நிறுவன ரீதியிலான ராணுவ பரிமாற்றங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன பிரதமர் லீ டெல்லி வருகை தந்த போது சீன தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்த திட்டத்தை நிறைவேற்ற பரஸ்பர ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும்.

இந்தியா வரும் சீன பயணிகளின் விசா நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்ற தகவலை பிரதமர் லீக்கு தெரிவிக்கிறேன். அதே போன்ற நடவடிக்கையை சீனாவும் மேற் கொள்ளும் என நம்புகிறேன். இந்தியாவும், சீனாவும் நண்பர்களாக கைகோர்க்கும் வேளையில் உலகம் பாதுகாப்பாக இருக்கும்’’ என்றார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சீன பிரதமர் லீ கெஹியாங் விருந்து அளித்தார். இந்திய பிரதமர் வருகைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் மன்மோகன்சிங்குக்கு இன்று விருந்து அளித்து சிறப்பு செய்தார்.