Home இந்தியா டில்லி பா.ஜ., முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிப்பு

டில்லி பா.ஜ., முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிப்பு

485
0
SHARE
Ad

Tamil_News_large_833739

புது டில்லி, அக் 23- கடும் இழுபறிக்கு பின்னர் டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ. முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிக்கப்பட்டார். இதனை தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்தார். முதல்வர் வேட்பாளராக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்கோயால் ஓரம் கட்டப்பட்டார்.

டில்லி உள்ளிட்ட 5மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

டில்லியில் காங். ஆட்சி நடக்கிறது. தலைநகர் என்பதாலும், வரப்போகும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாலும், பா.ஜ. மிகுந்த கவனத்துடன் இங்கு வியூகம் வகுத்து வருகிறது. டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிடம் இருந்து ஆட்சியை பறிக்க தீவிரம் காட்டி வருகிறது.

இம்மாநிலத்திற்கு டிச. 4-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையடுத்து பா.ஜ.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த ஒரு வாரமாக கடும் போட்டி நிலவியது. இதில் மாநில தலைவராக உள்ள விஜய்கோயல் தான் அறிவிக்கப்படுவார் என அவரது ஆதவராளர்கள் எதிர்பார்த்தனர். எனினும் பா.ஜ. மேலிடத்தின் சாய்ஸ் ஹர்ஷ வர்த்தன் தான் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் இன்று பா.ஜ.பார்லி.போர்டு கூட்டம் நடந்தது.இதில் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மாசுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், டில்லி சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தனை ராஜ்நாத்சிங்  அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் வேட்பாளராக விஜய்கோயல் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக, ஹர்ஷவர்த்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் பா.ஜ.வில் பிளவு எதுவும் இல்லை. டில்லியில் ஆட்சி செய்த பா.ஜ.வின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் ஹர்ஷவர்த்தன் என்றார்.

பா.ஜ. மேலிடத்தின் இந்த அறிவிப்பால், மாநில தலைவர் விஜய்கோயல் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் ஹர்ஷவர்த்தனுக்கு பா.ஜ.தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்கோயலும் ஹர்ஷவர்த்தனுக்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெறும். சட்டசபை தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்க்கொள்ளுங்கள், என அறிவுரை வழங்கினார்.