Home நாடு யாஹூ மலேசியா ‘சில்லி பாடி’ 3 நிமிட குறும்படப் போட்டி!

யாஹூ மலேசியா ‘சில்லி பாடி’ 3 நிமிட குறும்படப் போட்டி!

403
0
SHARE
Ad

5183f872-c9a6-49c9-b5e4-3a6d0439b775_Untitled-1கோலாலம்பூர், அக் 23 – யாஹூ மலேசியா நிறுவனம் ‘சில்லி பாடி விருதுகள்’ என்ற பெயரில் 3 நிமிட குறும்படப்போட்டியை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, மலேசியாவில் வாழும்  (வெளிநாட்டு குடிமகன்கள் உட்பட) 18 வயதிற்கு மேலுள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று படங்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும், அத்துடன் மூன்று வாரங்களுக்கு நாட்டிலுள்ள டிஜிவி திரையரங்குகளில் அந்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் யாஹூ மலேசிய நிறுவனத் தலைவர் மார்க் லௌர்ட்ஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

குறும்படங்களை www.cilipadiawards.com என்ற வலைத்தளத்தில் இன்று தொடங்கி வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரைப் பதிவு செய்யலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படங்களுக்கு வரும் நவம்பர் 23 ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும்.

எந்த ஒரு தனிநபரையும் பாதிக்காத வகையில் அரசியல், வாழ்க்கை என அனைத்து விதமான கதைகளையும் படமாக்கலாம் என்று லௌர்ட்ஸ் தெரிவித்தார்.