Home உலகம் தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?

693
0
SHARE
Ad

thalailaama

பீஜிங், அக் 23- சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத்தின் புத்த துறவி தலாய்லாமா அந்நாட்டு விடுதலைக்காக போராடினார். கடந்த 1959ம் ஆண்டு போராட்டத்தின் போது அவரை சீன ராணுவம், கைது செய்ய முயன்ற போது அவர் தப்பியோடி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அது முதல் அவர் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.  இந்நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தனது ரஷ்ய பயணத்தை முடித்து கொண்டு நேற்று சீனாவுக்கு 3 நாள் பயணமாக பீஜிங் வந்து சேர்ந்தார்.

அவரது வருகையையொட்டி, சீனா ஒரு வெள்ளை அறிக்கையை பீஜிங்கில் நேற்று வெளியிட்டது. அதில், ‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தலாய்லாமாவும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்தபடியே சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவுடன் எல்லையில் பிரச்சசனைகள் ஏற்படுவதற்கு அவர்களே முக்கிய காரணம்.

#TamilSchoolmychoice

திபெத்தில் தற்போதுள்ள சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்பதே தலாய் லாமாவின் நோக்கம். திபெத்தின் வளர்ச்சிக்காக சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு 94 சதவீத திபெத்தியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், இதை சீர்குலைக்க தலாய்லாமா முயற்சிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகனை சீன அதிபர் சந்திக்கும் போது, தலாய்லாமாவை நாடு கடத்துமாறு வேண்டுகோள் விடுப்பார் என்று தெரிக்கிறது.