பெய்ஜிங் – பிரச்சினைக்குரிய அருணாச்சலப் பிரதேசத்திற்குள் தலாய் லாமாவை அனுமதித்தது, சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான தூதரக உறவில் கடுமையான விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக சீனா இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.
சீனாவின் கவலையைப் பொருட்படுத்தாமல், இந்தியா வேண்டுமென்றே, கிழக்கு சீன – இந்திய எல்லையில், பிரச்சனைக்குரிய பகுதியில், தலாய் லாமாவை, பார்வையிட வைத்திருப்பது சீனா – இந்தியா இடையிலான நட்புறவைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்திருக்கிறார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, 81 வயதான திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 9 நாட்கள் சுற்றுப்பயணமாக, அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள போம்டிலா என்ற இடத்தை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.