Home Featured வணிகம் மலிண்டோ சர்ச்சைக்குரிய சோதனை: விசாரணை நடத்துமாறு எம்.பிக்கள் வலியுறுத்து!

மலிண்டோ சர்ச்சைக்குரிய சோதனை: விசாரணை நடத்துமாறு எம்.பிக்கள் வலியுறுத்து!

829
0
SHARE
Ad

malindo-air-staffகோலாலம்பூர் – நேர்காணலின் போது பெண்களின் மேலாடையை அவிழ்க்கச் சொன்னதாக மலிண்டோ ஏர் நிறுவனத்திற்கு எதிராகப் புகார்கள் வெளிவந்திருக்கும் நிலையில், அரசாங்கம் அதனை விசாரணை செய்ய வேண்டுமென 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மரியா மாஹ்முட் கூறுகையில், அச்செயல் மிகவும் அறுவெறுப்பாக இருப்பதோடு, பெண்களை அவமதிப்பது போல் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

“இந்த நவீன உலகத்தில், வேலை கேட்கும் போது உடம்பைக் காட்டச் சொல்வது, அறுவெறுப்பாக உள்ளது. மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு, போக்குவரத்து மற்றும் மனித உரிமை அமைச்சு இது போன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சித்தி மரியா கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கூறுகையில், இது ஒரு வகையான பாகுபாடு என்று தெரிவித்திருக்கிறார்.

மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான தியோ நி சிங் கூறுகையில், அப்படி ஒரு முறை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களிடம் தழும்போ, பச்சை மையோ இருக்கா என்று நேரடியாகவே கேட்கலாமே என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் தியோ கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த மார்ச் 11-ம் தேதி, நடைபெற்ற விமானப் பணிப்பெண்களுக்கான நேர்காணலில், இச்சம்பவம் நடைபெற்றதாக ‘மலாய் மெயில்’ செய்தி வெளியிட்டதையடுத்து, தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆனால், விமானப் பணிப்பெண்களுக்கான நேர்காணலில், தேர்வு செய்யப்படும் பெண்களின் மார்புப் பகுதியை சோதனை செய்வதற்கு விமான நிறுவனத்திற்கு உரிமை உள்ளதாக மலிண்டோ ஏர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ராஜா சாடி ராஜா அம்ரின் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.