Home Featured வணிகம் விமானப் பணிப்பெண்களின் மேலாடை அவிழ்க்கும் சோதனை – சர்ச்சையில் மலிண்டோ ஏர்!

விமானப் பணிப்பெண்களின் மேலாடை அவிழ்க்கும் சோதனை – சர்ச்சையில் மலிண்டோ ஏர்!

1173
0
SHARE
Ad

Malinod Airகோலாலம்பூர் – விமானப் பணிப்பெண்களுக்கான நேர்காணலில், கலந்து கொள்ள வந்திருந்த பெண்களை, மேலாடையை அவிழ்க்கும் படி கூறி, சர்ச்சையில் சிக்கியிருக்கிறது மலிண்டோ ஏர் விமான நிறுவனம்.

கடந்த மார்ச் 11-ம் தேதி, நடைபெற்ற விமானப் பணிப்பெண்களுக்கான நேர்காணலில், இச்சம்பவம் நடைபெற்றதாக ‘மலாய் மெயில்’ செய்தி வெளியிட்டதையடுத்து, தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

ஆனால், விமானப் பணிப்பெண்களுக்கான நேர்காணலில், தேர்வு செய்யப்படும் பெண்களின் மார்புப் பகுதியை சோதனை செய்வதற்கு விமான நிறுவனத்திற்கு உரிமை உள்ளதாக மலிண்டோ ஏர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இயக்குநர் ராஜா சாடி ராஜா அம்ரின் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட நேர்காணலின் போது, அங்கு வந்திருந்த பெண்களின் மேலாடைகள் மட்டுமே அவிழ்க்கச் சொல்லப்பட்டன. மாறாக சிலர் கூறிய புகார்கள் படி உள்ளாடைகள் அல்ல என்று ராஜா சாடி ராஜா அம்ரின் விளக்கமளித்திருக்கிறார்.

மேலும், “இது ஒரு பிரச்சினையே இல்லை. அது போல் உடல் சோதனை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. பெரும்பாலான விமான நிறுவனங்கள் அப்படிப்பட்ட சோதனைகளைச் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். விமானப்பணிப் பெண் வேலைக்கு வரும் பெண்களுக்கு தழும்பு, பருக்கள் அல்லது பச்சை குத்தியிருப்பது போன்றவை இருக்கிறதா? அவை சீருடைக்கு வெளியே தெரிகிறதா? என்பதை நாங்கள் சோதனை செய்ய வேண்டும். எங்கள் விமானப் பணிப்பெண்கள் சீருடைக்கு உள்ளே இறுக்கமான உள்ளாடை அணிவார்கள். அந்த உள்ளாடையில் அவை மறைந்துவிட்டால் பிரச்சினை இல்லை” என்று ராஜா சாடி தெரிவித்திருக்கிறார்.

மலிண்டோ விமானப் பணிப்பெண்கள் இரண்டு விதமான சீருடைகள் அணிகின்றனர். உயர் கழுத்துப் பட்டியுடன் கூடிய வெள்ளை மேலாடை அல்லது வெள்ளை கெபாயாவுடன் கூடிய சாரோங் (மலேசியாவில் ஆண், பெண்கள் அணியும் லுங்கி போன்ற ஆடை).

இந்நிலையில், விமானப் பணிப்பெண்கள் நடக்கும் போது, அவர்கள் கால்களில் வெளிப்படையாக ஏதாவது தழும்போ அல்லது மச்சமோ தெரிகின்றதா? என்பதையும் தாங்கள் சோதனை செய்வோம் என்றும் ராஜா சாடி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மலிண்டோவின் இந்த சோதனை முறையைக் கேள்விப்பட்டு, மற்ற விமான நிறுவனங்களைச் சேர்ந்தப் பல விமானப் பணிப்பெண்கள் கடும் விமர்சனங்களை நட்பு ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஏர் ஆசியாவில் பணியாற்றும் விமானப் பணிப்பெண் ஒருவர் தனது நிறுவனம் அப்படிப்பட்ட சோதனைகளைச் செய்வதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாற்றும் பெண் ஒருவர், இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.