Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

ஜெயலலிதாவின் ரூ.100 கோடி அபராதம் கட்டத் தேவையில்லை: உச்சநீதிமன்றம்

1128
0
SHARE
Ad

supreme-courtசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதத்தை அவரது சொத்துக்களை விற்று வசூலிக்க முடியுமா? என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அந்த சீராய்வு மனுவை இன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

#TamilSchoolmychoice

ஆய்வுக்குப் பின்னர், கர்நாடக அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.