அக் 24- அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனற பழமொழியே உண்டு. எனவே நாம் நம் முகத்தின் அழகை பாதுகாக்க வேண்டும்.பெண்களின் முக அழகுக்கு மேலும் சில அழகு குறிப்புகள் :
1. தக்காளி நறுக்கும் போது ஒரு துண்டை எடுத்து முகத்தில் அழுத்தி பூசவேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
2. முகப்பருவிற்கு துளசியையும், மஞ்சளையும் அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுகி வர முகப்பரு தோன்றாது.
3. முகத்தில் வெண்மையான தேமல் இருந்தால் ஆவாரை வேரை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து பூசினால் வெண்மை தேமல் மறையும்.
4. கடுகு, எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கங்கள், மாசு, மருக்கள் நீங்கி விடும்.
5. மஞ்சளுடன் சந்தனத்தை கலந்து முகம் முழுவதும் பூசி காய்ந்த பின் ஈர பஞ்சினால் துடைத்து வர 15 நாட்களில் பிரகாசமான முகத்தை பெறலாம்.
6. ஆலிவ் எண்ணெயுடன் கருஞ்சீரகத்தை பொடி செய்து அதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.
7. பருக்களினால் ஏற்படும் தழும்பு மறைய எலுமிச்சம் பழச்சாற்றில் சமஅளவு தேங்காய் எண்ணெயும் சந்தனமும் கலந்து இரவில் பூசி வந்தால் தழும்பு மறையும்.