Home வாழ் நலம் அழகுக்கு அழகு சேர்க்க

அழகுக்கு அழகு சேர்க்க

822
0
SHARE
Ad

The-mask-of-honey.

அக் 23- பெண்களே உங்கள் அழகுக்கு அழகு சேர்க்க இதோ சில எளிய முறைகள்.

1. முகச்சுருக்கம், முகப்பருக்கள் இருந்தால் ஆப்பிள் துண்டை தோலுரித்து மசித்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பிறகு முகம்  கழுவினால் முகம் பளபளப்பாகும்.

#TamilSchoolmychoice

2. நல்லெண்ணையுடன் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து பருக்களின் மீது பூசினால் பரு மறையும்.

3. வெயிற்காலங்களில் வேனிற்கட்டி வருவதுண்டு. அதிக உஷ்ணத்தினால் இது வருகிறது. இந்த கட்டியை போக்க அவரி இலையையும் அல்லி  இலையையும் சமமாக எடுத்து அழசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்துவிடும்.

4. நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில் உப்புப் போட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திக் கொள்ளுங்கள். அதை சாம்பார், கூட்டு, சட்னி  ஏதாவதொன்றில் போட்டு தினமும் சாப்பிட்டு வந்தாள் தோல் சுருக்கம் வருவது தள்ளிப்போகும்.

5. வெள்ளரி துண்டுகளை முகத்தில் கண்களுக்கருகில் தேய்த்தால் கண்கள் குளிர்ச்சியடையும். முகத்தில் தடவினால் கருப்புக்கோடுகள் மறையும்.