Home வாழ் நலம் வேலைக்கு போகும் பெண்களுக்கு எளிய அழகு குறிப்புகள் !

வேலைக்கு போகும் பெண்களுக்கு எளிய அழகு குறிப்புகள் !

1094
0
SHARE
Ad

alagu-630x350தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்.

1. கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

2. சருமம் மற்றும் முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் முகக் கவசத்தை வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

#TamilSchoolmychoice

3. நகங்கள் அழகாக இருப்பதற்கு நகப் பூச்சு பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த நகப்பூச்சு சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நகப்பூச்சைப் பூச வேண்டும்.

4. சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.