Home வணிகம்/தொழில் நுட்பம் மலிண்டோ – இணைய வழி பயணப் புறப்பாட்டுப் பதிவு

மலிண்டோ – இணைய வழி பயணப் புறப்பாட்டுப் பதிவு

532
0
SHARE
Ad

malindo airசுபாங், அக் 11- மலிண்டோ ஏர் நிறுவனத்தின் இணைய வழி பயணப் பதிவுச் சேவையை நேற்று வியாழனன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

விமான நிலைய முகப்பிடங்களில் பதிவதைவிட இது எளிதான முறையாகும். மலேசியாவிலுள்ள 11 முனையங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான மின்னியல் பயணச் சீட்டைக் கொண்டுள்ளவர்கள் தற்போது இணையம் வழி பயணப் புறப்பாட்டை பதிவு செய்து, இருக்கையை தேர்வு செய்து கொள்வதுடன் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இச்சேவையைப் பெற பயணிகள் www.malindoair.com இல் webcheck-in ஐத் தேர்வு செய்து தங்களின் பெயர், மின்னியல் பயணச் சீட்டு எண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.பின் இருக்கைகளைத் தேர்வு செய்து பயணச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மலிண்டோ ஏர் நிறுவத்தின் முதன்மை செயல்முறை அதிகாரி சந்திரன் இராமமூர்த்தி கூறியுள்ளார்.இதன்மூலம் பயணப் புறப்பாட்டுப் பதிவை மேற்கொள்ள பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice