Home வணிகம்/தொழில் நுட்பம் கோலாலம்பூர் – திருச்சி வழித்தடத்தில் கூடுதல் விமான சேவை: மலிண்டோ ஏர் திட்டம்

கோலாலம்பூர் – திருச்சி வழித்தடத்தில் கூடுதல் விமான சேவை: மலிண்டோ ஏர் திட்டம்

1089
0
SHARE
Ad

malindo-airகோலாலம்பூர், ஜூலை 4 – வரும் ஆகஸ்ட் மாதம் முதல் கோலாலம்பூர் – திருச்சி – கோலாலம்பூர் வழித்தடத்திற்கான விமான சேவையை அதிகரிக்க மலிண்டோ ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்த வழித்தடத்தில் வாரந்தோறும் 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் பெரும்பாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்புகின்றன.பயணிகளிடம் கிடைத்துள்ள இந்த வரவேற்பையடுத்துக் கூடுதலாக 4 விமானங்களை இதே வழித்தடத்தில் இயக்க மலிண்டோ ஏர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த வழித்தடம் மிக வசதியாக உள்ளது. இதையடுத்தே ஆகஸ்ட் மாதம் முதல் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது என்றும், எந்தத் தேதி முதல் கூடுதல் சேவை அமலுக்கு வரும் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மலிண்டோ ஏர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

கோடை கால அட்டவணையின்படி காலை 9.55 மணியளவில் திருச்சி வந்து சேரும் மலிண்டோ விமானம் 10.45 மணிக்கு அங்கிருந்து கோலாலம்பூர் புறப்படுகிறது. 190 பயணிகளை உள்ளடக்கக் கூடிய இந்த விமானத்தில் பெரும்பாலான இருக்கைகள் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.

மலேசியா, சிங்கப்பூர் செல்லும் தென் தமிழகப் பயணிகளுக்கு இந்த விமான சேவை வெகுவாகக் கைகொடுக்கிறது. அதேவேளையில் சரக்குகள் கையாளும் பிரிவினரும் இம்முடிவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விமானச் சேவை அதிகரிக்கப்படும் பட்சத்தில் கூடுதலாக 3 டன் பொருட்களை விமானத்தில் அனுப்பும் வாய்ப்பு உருவாகும் என்பதே இந்த உற்சாகத்திற்குக் காரணம்.