ஈப்போ, ஆகஸ்ட் 15 – ஈப்போவிற்கு முதல் முறையாக மலிண்டோ ஏர் விமான சேவையை வழங்க முன்வைத்த விண்ணப்பத்தை பேரா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என பேரா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சம்ரி காதிர் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது, “மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி, தம்மை அலுவலகத்தில் சந்தித்து இப்பரிந்துரையை முன்வைத்ததார்”
ஈப்போவில் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையம் அனைத்துலக தரத்தில் புதுப்பிக்கப்பட்டிருப்பதால் தற்போது சிங்கப்பூருக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படுகிறது.
மலிண்டோ ஏர் விமான சேவை உள்ளூர், வெளியூர்களுக்கு மலிவு விலையில் தனது சேவையை செயல்படுத்தி வருவதன் அடிப்படையில் ஈப்போவிற்கு தனது சிறகை விரிக்க முன்வந்திருப்பதை பேரா அரசு வரவேற்கிறது.
மலிண்டோ ஏர் விமான நிறுவனம் ஈப்போ அஸ்லான் ஷா விமான நிலையத்திலிருந்து உள்ளூர், வெளி நாடுகளுக்கு விமான சேவையை வழங்க பரிந்துரை செய்துள்ளது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக மாநில அரசு ஆட்சிக்குழுவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிய பிறகு விரைவான முடிவு எடுக்கப்படும் எனவும், மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தின் இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் டத்தோஸ்ரீ சம்ரி காதிர் கூறினார்.