Home நாடு பட்டம் பெற்ற மகள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய டோனி

பட்டம் பெற்ற மகள்: ஆனந்தக் கண்ணீர் சிந்திய டோனி

696
0
SHARE
Ad

airasia-boss-tony-fernandesகோலாலம்பூர், ஜூலை 4 – தனது மகள் ஸ்டீஃபைன் பட்டம் பெற்ற அந்தத் தருணமே தமது வாழ்நாளின் மிகச் சிறந்த தருணமாக அமைந்துள்ளது என ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.

மகள் பட்டம் பெற்றதும், தான் ஆனந்தக் கண்ணீர் சிந்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது இந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் தன்னைப் பின் தொடர்பவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

“இது எனக்கு மிகச் சிறந்த நாள். எனது மகள் டெர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். நான் அதிகம் அழுததில்லை,” என்று தனது முதல் பதிவில் டோனி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து மற்றொரு பதிவில், “இவையே என் வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள். எதற்கும் அலட்டிக் கொள்ளாத மகளைப் பெற்றுள்ளேன். மகளே… நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார் டோனி.

தனது மகள் பட்டம் பெற்றபோது அடைந்த பூரிப்பையும் அவர் மேலும் விவரித்துள்ளார்.
இதற்கிடையே ‘தி எகனாமிக் டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், டோனியின் மகள் ஸ்டீஃபைன் மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்துதல்) பிரிவில் பட்டம் பெற்றதாகவும், அவருக்கு இசையில் மிகுந்த ஆர்வம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக இறுதியாண்டில் ‘இணையம் வழி இசைச் சேவைகள்’ என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இசை குறித்து விரிவாகப் பல தகவல்களை இடம்பெறச் செய்துள்ளார் ஸ்டீஃபைன்.

டோனி குடும்பத்தாருக்கு இயல்பாகவே இசையின் மீது ஆர்வம் இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் டோனியும் கூட முன்பு வர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தின் கணக்காய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.

பின்னர் வார்னர் மியூசிக் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், அதன் வட்டாரத் துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகே ஏர் ஆசியா நிறுவனத்தைத் தொடங்கினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.