எரிபொருள் நிரப்பாமல் தனிநபர் விமானம் ஒன்று சுமார் 118 மணிநேரத்தில் இந்தத் தூரத்தைக் கடப்பது இதுவே முதல் முறை. அந்தச் சாதனையைப் போர்ஷ்பெர்க் செய்துள்ளார். இந்தச் சாதனை குறித்துப் போர்ஷ்பெர்க் பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில், “தனிநபராக இந்தத் தூரத்தைக் கடந்தது எத்தகைய சோர்வையும் தரவில்லை. ஆச்சரியத்தைத் தான் அளிக்கிறது. எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு தான் எங்களின் இந்த உற்சாகத்திற்குக் காரணம்.”
முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் இந்த விமானம், தனது முதல் உலகச் சுற்றுப் பயணத்தை அபுதாபியில் மார்ச் 9-ம் தேதி தொடங்கியது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் வடிவமைத்துள்ள இந்த விமானத்தை, வர்த்தகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் முயற்சியாகவே இந்த உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, 617 மணி நேரத்தில் சுற்றி வருவதே இந்த விமானத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.