Home தொழில் நுட்பம் சவாலான பயணத்தைத் தொடங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்: 5 பகல் – 5 இரவு நிற்காமல்...

சவாலான பயணத்தைத் தொடங்கியது சோலார் இம்பல்ஸ் விமானம்: 5 பகல் – 5 இரவு நிற்காமல் பயணம்!

592
0
SHARE
Ad

solar-impulse-night-2தோக்கியோ, ஜூன் 29- சூரிய ஒளியின் மூலம் உலகை வலம் வரும் விமானம் சோலார் இம்பல்ஸ் விமானமாகும்.

இந்த விமானம், இன்று தனது சவாலான பயணத்தைத் தொடங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் இருந்து, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில், பசிபிக் பெருங்கடல் நாடான ஹவாய் தீவுக்குச் ‘சோலார் இம்பல்ஸ்-2’ விமானம் புறப்பட்டுச் சென்றது.

#TamilSchoolmychoice

இந்தச் சவாலான பயணத்தில் சோலார் இம்பல்ஸ் விமானம் 5 பகல் 5 இரவு இடைவிடாமல் வானில் பறந்து 7900 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

இத்தகைய சவாலான பயணம் குறித்து, இவ்விமானப் பயணத் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பெட்ராண்ட் பிக்கார்ட் கூறியதாவது:

வானிலையைக் கூர்ந்து கவனித்த பின்பே விமானத்தின் பயணம் துவங்கப்பட்டுள்ளது.

விமானத்தின் போக்கு, பறக்கும் உயரம், பயணிக்கும் நேரம் ஆகியவை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

3வது நாள் பயணத்தின் போது மேகக்கூடத்தின் ஊடாகப் பயணிக்கும் விமானம், பின்னர் 5வது நாளிலும் மேகக்கூட்டத்தின் ஊடாகப் பயணித்து இலக்கை அடையும்.

இதில் ஏதாவது குறை ஏற்பட்டாலும், விமானத்தை எங்கும் தரையிறக்க முடியாது.

எனினும், இச்சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ள விமானி போர்ச்பெர்க்(62 வயது), ஆபத்து ஏற்பட்டால் பாராசூட் மற்றும் லைப் ராப்ட் மூலம் குதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால்,லைப் ராப்ட்டைப் பயன்படுத்திக் கடலில் மிதக்கும் போர்ச்பெர்க் மூன்று நாட்களுக்குள் கப்பல் மூலம் மீட்கப்படுவார்” என்று அவர் விளக்கினார்.