Home நாடு மஇகா தலைமையகம் முற்றுகையிடப்படும் என்ற செய்தியால் பரபரப்பு!

மஇகா தலைமையகம் முற்றுகையிடப்படும் என்ற செய்தியால் பரபரப்பு!

432
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 29 – இன்று பிற்பகல் 3.00 மணிக்கு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் 2009 மத்தியச் செயலவை மஇகா தலைமையகத்தின் அருகில் உள்ள டைனஸ்டி தங்கும் விடுதியில் நடைபெற்றது.

அதனைத், தொடர்ந்து பிற்பகல் 4.00 மணிக்கு பழனிவேலுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

mic hq - police block - 29 june -

#TamilSchoolmychoice

மஇகா தலைமையகத்தின் வாசல் கதவுகள் பூட்டப்பட்டு, காவல் துறையினர் மஇகா தலைமையகத்தின் முன் வாகனங்களைத் தடுத்து திருப்பிவிட்ட காட்சி

இதனைத் தொடர்ந்து பல கிளைத் தலைவர்களும், ஆதரவாளர்களும் ஒன்று கூடிப் பழனிவேலுவுக்கு ஆதரவாக மஇகா தலைமையகத்தை முற்றுகையிடுவார்கள் என்றும் செய்திகள் பரவத்தொடங்கின.

அதே பிற்பகல் நேரத்தில் மஇகா இடைக்காலத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மற்றும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் ஆகியோர் மஇகா தலைமையகத்தில் வேறு சில கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் சுப்ராவின் ஆதரவாளர்களும், கிளைத் தலைவர்களும் மஇகா தலைமையகத்தில் குழுமத் தொடங்கினர்.

பிற்பகல் 3.00 மணிக்கு காவல் துறையினரும் வாகனங்களும் மஇகா தலைமையகத்தில் நிறுத்தப்பட்டு, மஇகா தலைமையகம் அமைந்திருக்கும் ஜாலான் ரஹ்மாட் சாலை காவல் துறையினரால் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மாலை 5.00 மணியளவில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட சுப்ரா ஆதரவாளர்கள் மஇகா தலைமையக வளாகத்தில் திரண்டிருந்த வேளையில், மஇகா தலைமையகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன.

இருப்பினும், அதன் பின்னர் எந்தக் குழுவினரும் மஇகா தலைமையகத்தை நோக்கி வராத காரணத்தால், எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல், மஇகா தலைமையகத்தில் குழுமியிருந்த ஆதரவாளர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.

இருப்பினும் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மஇகா தலைமையகம் இந்தச் சம்பவங்களால் பரபரப்பிற்குள்ளானது.