Home கலை உலகம் கின்னஸ் சாதனை படைக்கிறது பாகுபலி சுவரொட்டி!

கின்னஸ் சாதனை படைக்கிறது பாகுபலி சுவரொட்டி!

563
0
SHARE
Ad

pakuதிருவனந்தபுரம்,ஜூன் 29- நேற்று மாலை கொச்சியில், மலையாளப் பாகுபலி படத்தின் பாடல்களைப் படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் இயக்குநர் ராஜமௌலி  போன்றோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.

பாகுபலி படத்தின் மொழிமாற்றுப் படம் தான் மலையாளப் பாகுபலி என்றாலும், அதிக விளம்பரம் செய்து நேற்று பாடல்களை வெளியிட்டனர்.

இதில் சிறப்பான அம்சமாக, மலையாள இசை வெளியீட்டின் சுவரொட்டியை மிகப் பெரிதாக வடிவமைத்துக் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

உலகிலேயே மிகப்பெரிய சுவரொட்டி என்னும் பெருமையை இந்தச் சுவரொட்டி பெற்றுள்ளது, தற்போது இந்தச் சுவரொட்டியைக் கின்னஸுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

பாகுபலி, கின்னஸில் இடம் பெற வாழ்த்துவோம்!