Home உலகம் இராசயன ஆயுத தடுப்பு நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

இராசயன ஆயுத தடுப்பு நிறுவனத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு!

629
0
SHARE
Ad

Nobel-Prize-Featureஅக்டோபர் 12 – இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஆப்கானிஸ்தானின் மகளிர் கல்விக்கான போராட்ட மங்கையும், தலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டவருமான மலாலாவுக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இராசயன ஆயுத தடுப்பு நிறுவனத்திற்கு அந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)  என்று அழைக்கப்படும் அந்த நிறுவனம்,  சிரியா நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போராட்டக் களங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அபாயம் நிறைந்த இராசயன ஆயுதங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றது. அந்த உயரிய பணிக்காகத்தான் இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை இந்த நிறுவனம் பெறுகின்றது

ஒரு குறைந்த அளவிலான நிதிக் கையிருப்பைக் கொண்டிருக்கும் சிறிய அமைப்பாக இருந்தாலும் இந்த நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,400க்கும் மேற்பட்ட மக்களின் மரணத்திற்குக் காரணமான இராசயனத் தாக்குதலுக்குப் பின்னர் இராசயன ஆயுத நிபுணர்களை சிரியாவுக்கு அனுப்பியது.

இராசயனத் தடுப்பு நிறுவனத்திற்கு ஐக்கிய நாட்டு சபையும் ஆதரவு வழங்கியது. இந்த நடவடிக்கையின் மூலம் சிரியா மீது அமெரிக்கா மேற்கொள்ளவிருந்த தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டது.

நோபல் பரிசுகளின் மற்றொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், வெடிகுண்டு ஆயுதங்களின் மூலமான, டைனமைட் (dynamite) எனப்படும் வெடிகுண்டைக் கண்டுபிடித்தவர்தான் நோபல் பரிசுகளுக்கான அறக்கட்டளையை ஏற்படுத்திய ஆல்ஃபிரட் நோபல் ஆவார்.

1895இல் ஆல்ஃபிரட் நோபல் விட்டுச் சென்ற உயிலின்படி, அமைதிக்கான நோபல் பரிசு நாடுகளுக்கிடையில்  அணுக்கமான தொடர்பு, இராணுவக் குறைப்பு, அமைதியைப் பரப்பும் நடவடிக்கைகள் ஆகிய மூன்று நோக்கங்களில் ஒன்றுக்காக வழங்கப்பட வேண்டும்.

இராசயன ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் நாடுகள் அவற்றை அழிக்க வேண்டும் என நினைவுறுத்துவதற்காகத்தான் இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசளிப்புக் குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.