Home உலகம் நோபல் இலக்கியப் பரிசு – தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குருனாவுக்கு கிடைத்தது

நோபல் இலக்கியப் பரிசு – தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குருனாவுக்கு கிடைத்தது

619
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆப்பிரிக்க நாடான தான்சானியா நாட்டைச் சேர்ந்த அப்துல் ரசாக் குருனா பெறுகிறார்.

இவர் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். தனது 21 வயதில் இலக்கியம் சார்ந்து எழுதத் தொடங்கினார். பல நாவல்களை எழுதிய அவர், சமீபத்தில் வளைகுடா நாடுகளில் அகதிகள் குறித்து எழுதியிருந்த புத்தகத்திற்காக நோபல் பரிசை பெறுகிறார்.

இவர் நோபல் பரிசுக்கு தேர்வாகியிருப்பது தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமியின் நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 3 தினங்களாக மருத்துவம் – இயற்பியல் – வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த வரிசையில் நேற்று இலக்கியத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் ரசாக்கின் சிறப்புகள் குறித்து நோபல் பரிசுக் குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல், அனுதாபத்துடன் காலனித்துவ பாதிப்புகளை ஆழமாக அணுகுவதிலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அகதிகள் கண்டங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருக்கும் அவலத்தையும்” சித்தரிப்பவர் எனத் தெரிவித்துள்ளது.

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.