டொடொமா: தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி 61 வயதில் காலமனதாக துணை அதிபர் அறிவித்துள்ளார்.
அவர் புதன்கிழமை டார் எஸ் சலாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருதய சிக்கல்களால் காலமனாதாக சமியா சுலுஹு ஹாசன் அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மகுபுலி இரண்டு வாரங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் காணப்படவில்லை, மேலும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வந்தன.
அவர் கொவிட் -19 தொற்றுக்கு ஆளானதாக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர், ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
மகுபுலி ஆப்பிரிக்காவில், கொவிட்-19 தொற்று நோயை எதிர்கொள்ள பிரார்த்தனைகள் மற்றும் மூலிகைகள் நீராவி சிகிச்சைக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஆழ்ந்த வருத்தத்தோடு இன்று நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நமது தலைவர், தான்சானியா குடியரசின் தலைவர் ஜான் பாம்பே மகுபுலியை இழந்தோம்,” என்று துணை அதிபர் ஹசான் அறிவிப்பில் தெரிவித்தார்.
14 நாட்கள் நாடு துக்கம் அணுசரிக்கும் என்றும், கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்றும் அவர் கூறினார்.