ஒஸ்லோ: 2020- ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்பட்டுள்ளது.
போர் மற்றும் மோதலின் ஆயுதமாக ‘பசி’யைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக உலக உணவுத் திட்டம் செயல்பட்டுள்ளது என்று நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.
இந்த பரிசு மதிப்பு 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனாவாகும் ( 1.1 மில்லியன் டாலர்).
ஒஸ்லோவில் 101- வது முறையாக வெற்றி பெறுபவரை நோபல் குழு அறிவித்தது.
உலக உணவுத் திட்ட செய்தித் தொடர்பாளர் இது ஒரு பெருமைமிக்க தருணம் என்று கூறினார்.
88 நாடுகளில் ஆண்டுக்கு 97 மில்லியன் மக்களுக்கு இது உதவுகிறது என்று உலக உணவுத் திட்டம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமட்டுக்கு வழங்கப்பட்டது.