Home கலை உலகம் பிரச்னைகளுக்கு மூட்டை கட்டிய நடிகை அனன்யா

பிரச்னைகளுக்கு மூட்டை கட்டிய நடிகை அனன்யா

773
0
SHARE
Ad

ananya-engagement-stills

சென்னை,அக் 23- நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்திருந்த நடிகை அனன்யா திருமண சர்ச்சையில் சிக்கினார். ஆஞ்சநேயலு என்பவரை மணக்க முடிவு செய்தவருக்கு குடும்பத்தில் திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திருமணம் தடைபட்டது. இதையடுத்து இவர்களின் திருமணம் நின்றுவிட்டது. ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக சினிமாவுலகில் பேச்சு நிலவுகிறது. இப்பிரச்னைகளால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த அனன்யா தற்போது அதிலிருந்து மீண்டுவிட்டாராம்.

இதுபற்றி அவர் கூறியதாவது: நான் மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ் படங்களில் நடிக்கும்போது ரொம்பவும் வசிதியாக உணர்கிறேன். தொடக்க காலத்திலிருந்தே எனக்கு வலுவான வேடங்கள் தமிழில்தான் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எல்லா படங்களுமே வெற்றியை தந்தது. தேடி வரும் எல்லா படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை. தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன். சில விரும்பத்தகாத சம்பவங்களால் நடிப்பதில் கொஞ்சம் தேக்கம் ஏற்பட்டது. இப்போது அதிலிருந்து மீண்டுவிட்டேன். அந்த பிரச்னைகளை மூட்டை கட்டிவிட்டேன். நடிப்பில் முன்பைவிட இப்போது அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறேன். தற்போது தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறேன். தொடர்ந்து கதைகள் கேட்டும் வருகிறேன்.