Home கலை உலகம் கணவருடன் விவாகரத்தா? -அனன்யா

கணவருடன் விவாகரத்தா? -அனன்யா

684
0
SHARE
Ad

ananyaஜூன் 1- நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. சீடன், எங்கேயும் எப்போதும் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

அனன்யாவுக்கும் திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயலுவுக்கும் 2012-ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் தெரியவர அனன்யாவின் பெற்றோர் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பை மீறி அனன்யா திருப்பதியில் ஆஞ்சநேயலுவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. தற்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவியுள்ளன.

#TamilSchoolmychoice

ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்புக்கு வந்த அனன்யாவிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கணவனை விவாகரத்து செய்து விட்டதாகவும் வதந்தி வெளியாகியுள்ளதே என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அனன்யா கூறும்போது, அதெல்லாம் என் சொந்த விஷயங்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியாது. சினிமா விஷயங்கள் பற்றி கேட்டால் மட்டுமே பதில் சொல்வேன் என்றார்.

மேலும் அனன்யா கூறியதாவது:- நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்தேன். தமிழில் நடித்த நாடோடிகள் படம் வெற்றிபெற்றதால் திருப்புமுனை ஏற்பட்டது. அப்படம் பல மொழிகளில் வந்ததால் பிரபலமானேன். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததற்காக விருதுகள் கிடைத்தன. கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். எதிர்காலத்தில் திரைப்பட இயக்குனர்  ஆக வேண்டும் என்பது என் ஆசையாக உள்ளது.