Home அரசியல் சபாவில் நுழையத் தடை – அடுத்த இலக்கு அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங்!

சபாவில் நுழையத் தடை – அடுத்த இலக்கு அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங்!

570
0
SHARE
Ad

Anwar-Lim-Kit-Siangமே 31 – இரண்டு நாட்களுக்கு முன்னால் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நுருல் இசாவைத் தொடர்ந்து மேலும் பல எதிர் கட்சித் தலைவர்களுக்கும் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

#TamilSchoolmychoice

“தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் எனது தந்தை அன்வார் இப்ராகிமும், ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கும் இருப்பதாக நான் நம்புகின்றேன்” என்று நுருல் இசா அன்வார் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கு முன்னால், பத்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தியான் சுவாவிற்கு சபாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும் பல சமூகப் போராட்டவாதிகளும் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய நுருல், தடை செய்யப்பட்டிருப்பவர்களின் பட்டியலைக் காட்டுமாறு சபா குடிநுழைவுத் துறை அதிகாரிகளைத் தான் கேட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும் அந்தப் பட்டியலில் தனது தந்தை அன்வார் இப்ராகிம் பெயரும், லிம் கிட் சியாங் பெயரும் இருப்பதாக தான் நம்புவதாக நுருல் இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் சபாவில் நுழைவதற்கு லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான நுருல் இசாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

சபாவில் கொண்டாடப்படும் அறுவடைப் பெருநாள் எனப்படும் விழாவில் கலந்து கொள்ள நுருல் இசா தனிப்பட்ட வருகை ஒன்றை சபாவிற்கு மேற்கொள்ளவிருந்தார்.