Home கலை உலகம் சிவகார்த்திகேயன் வீட்டில் குவா குவா…

சிவகார்த்திகேயன் வீட்டில் குவா குவா…

699
0
SHARE
Ad

sivakarthikeyan aarthi

சென்னை,அக் 22-சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கால்பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். நகைச்சுவை நடிகராக இருந்து கதாநயாகனாக உயர்ந்தவர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார்.

இவர் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகா மொத்வானியுடன் நடித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

இவருக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2010–ல் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக சென்றிருந்தார். இந்நிலையில், ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டு மதுரை மருத்துவமனையில் அழகான பெண் குழந்தையை பிரசவவித்தார்.

தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.