Home 13வது பொதுத் தேர்தல் நவம்பர் 16 ல் வேட்புமனுத் தாக்கல்! நவம்பர் 30 ல் ம.இ.கா தேசிய நிலையிலான தேர்தல்!...

நவம்பர் 16 ல் வேட்புமனுத் தாக்கல்! நவம்பர் 30 ல் ம.இ.கா தேசிய நிலையிலான தேர்தல்! – பழனிவேல் அறிவிப்பு

603
0
SHARE
Ad

IMG_9693கோலாலம்பூர், அக் 25 – ம.இ.கா தேசிய அளவிலான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்த மாதம் 16 ஆம் தேதியும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதியும் நடைபெறும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் நேற்று அறிவித்தார்.

வேட்புமனுத்தாக்கல் கட்சித் தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெறும் என்பதையும் பழனிவேல் குறிப்பிட்டார். உதவித்தலைவர் பதவிகளுக்கு 10 பேர் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.

நேற்று மாலை ம.இ.கா தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிவேல், “கட்சியின் தேசியப் பேராளர் மாநாடு வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும். டிசம்பர் 1 ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் மாநாட்டிற்கு வருகை புரிந்து மாநாட்டைத் தொடங்கி வைப்பார்” என்று பழனிவேல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கட்சியின் மாநிலக் கூட்டங்கள் வரும் நவம்பர் 14 ஆம் தேதி பினாங்கு மாநிலத்திலும், சிலாங்கூரில் வரும் நவம்பர் 9 ஆம் தேதியும், ஜோகூர் , மலாக்கா மற்றும் நெகிரிசெம்பிலான் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 10 ஆம் தேதியும், கெடா மாநிலத்தில் 14 ஆம் தேதியும், பேராக் மாநிலத்தில் 15 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் பழனிவேல் அறிவித்தார்.

கூட்டரசுப் பிரதேசம், பகாங், திரெங்கானு, சபா, கிளந்தான்,பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுக்கான தேதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று பழனிவேல் தெரிவித்தார்.

இதனிடையே, ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர் பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 8 ஆம் தேதியும், தேர்தல் நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் பழனிவேல் கூறினார்.

– பீனிக்ஸ்தாசன்