டி.மோகனின் சமூகச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு ம.இ.கா வில் இணைந்த மோகன் பூச்சோங் தொகுதியில் உள்ள கேம்ப் வில்லேஜ் ம.இ.கா கிளை இளைஞர் பிரிவுத் தலைவரானார்.
அதன் பின்னர், பூச்சோங் தொகுதி ம.இ.கா இளைஞர் பிரிவுச் செயலாளராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக சேவயாற்றி வரும் டி.மோகன், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராகவும், பல்வேறு விளையாட்டுத்துறை அமைப்புகளிலும் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments