Home நாடு தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவிற்கு 6 வது இடம்!

தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவிற்கு 6 வது இடம்!

530
0
SHARE
Ad

46e6ad11927caa34592ab80b4d06d326கோலாலம்பூர், அக் 29 –  தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் என்று உலக வங்கி நடத்திய வர்த்தகம் 2014  என்ற ஆய்வின் அடிப்படையில், மலேசியாவிற்கு தரவரிசைப் பட்டியலில் 6 வது இடம் கிடைத்துள்ளது.

சுமார் 189 நாடுகள் அடங்கிய இந்த ஆய்வில், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா போன்றவற்றையெல்லாம் முந்திக் கொண்டு 6 வது இடைத்தைப் பிடித்துள்ளது மலேசியா.

அதன் படி, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு இணையான இடத்தை மலேசியா அடைந்துள்ளது என்று மலேசியாவின் அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முஸ்தபா முகமட்(படம்) கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், வரும் 2015 ஆம் ஆண்டில் முதல் 10 நாடுகளில் ஒன்றாக வருவது என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இலக்கையும் தாண்டி, அதற்கு முன்னதாகவே இந்த நிலையை மலேசியா அடைந்து விட்டது என்றும் முஸ்தபா குறிப்பிட்டார்.

பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி ஏற்ற சமயத்தில் 23 வது இடத்தில் இருந்த மலேசியா, மிக விரையில் 6 வது இடத்திற்கு உயர்ந்திருப்பது, அவரது தலைமையிலான அரசாங்கத்தின் முன்னேற்றம் மற்றும் உருமாற்றத்திற்கான சான்று என்றும் முஸ்தபா தெரிவித்தார்.