Home நாடு பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து

பள்ளிகளில் மாடுகள் பலியிடுவது கல்வியின் ஒரு பகுதியாகும் – ஷாபுடின் கருத்து

652
0
SHARE
Ad

m_penagac284கோலாலம்பூர், அக் 29 – இஸ்லாமிய முறைப்படி பள்ளிக்கூடங்களில் மாடு பலியிடுவது என்பது மாணவர்களின் கல்வியில் ஒரு பகுதியாகும் என்று தேசிய முன்னணியைச் சேர்ந்த தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் நடந்த விவாவத்தில் பேசிய அவர், மாடு பலியிடுவது என்பது இஸ்லாமிய சடங்குகளில் ஒன்று என்றும், அதை எப்படி செய்வது என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மாடுகளை முறைப்படி பலியிடுவது எப்படி என்பதை இது போன்ற சடங்குகள் மூலம் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஷாபுடின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதில் இந்து சமுதாயத்தினரை அவமதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நடத்தும் மத ஊர்வலங்களை இஸ்லாமிய மக்கள் சகித்துக் கொண்டிருப்பதையும் ஷாபுடின் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் இவ்விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், புனித ஹஜ்ஜூப் பெருநாளில் தேசியப் பள்ளிகளில் மாணவர்கள் முன்னால் மாடுகள் பலியிடப்படுவது பசுக்களை தெய்வமாக வழிபடும் இந்துக்களின் நம்பிக்கையை அவமதிப்பது போலாகும் என்று குற்றம் சாட்டினார்.

“அது  (பள்ளி) என்ன இறைச்சிக் கூடமா? அதற்கு (பலியிடுவதற்கு) அனுமதி இருக்கிறதா? என்று குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், “சீன சமுதாயத்தினரில் 93 சதவிகிதத்தினர் தங்களது குழந்தைகளை சீன பள்ளிக்கு அனுப்புகின்றனர். இந்தியர்களில் 60 சதவிகிதத்தினருக்கு அதிகமானோர் குழந்தைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்” என்று குலசேகரன் குறிப்பிட்டார்.