Home நாடு குர்பான் விவகாரம்: பள்ளிகளில் பலியிடத் தடை என்கிறார் கமலநாதன்! பலியிடலாம் என்கிறார் இட்ரிஸ் ஜூஸோ!

குர்பான் விவகாரம்: பள்ளிகளில் பலியிடத் தடை என்கிறார் கமலநாதன்! பலியிடலாம் என்கிறார் இட்ரிஸ் ஜூஸோ!

634
0
SHARE
Ad

P.KAMALANATHANகோலாலம்பூர், அக் 28 – பள்ளிகளில் கால்நடைகளை பலியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூஸோ (II) கூறியுள்ளார்.

இருப்பினும், இது போன்ற சடங்குகளை பள்ளிகளில் நடத்தும் போது மற்ற மதத்தினரையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் செய்துள்ள பதிவில், “இது போன்ற சடங்குகளை நடத்தினால் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இவ்விவகாரத்தில் கடந்த வாரம் கருத்துரைத்த துணைக் கல்வியமைச்சர் (II) கமலநாதன், இது போன்ற சடங்குகளை பள்ளிகளில் நடத்துவதற்கு தடையுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் தாங்கள் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், பள்ளி நிர்வாகம் மாவட்டக் கல்வித்துறைக்கு தகவல் அனுப்பாதது தான் பிரச்சனைக்குக் காரணம் என்றும் கமலநாதன் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம் சடங்குகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வித் துறைக்கு தகவல் அனுப்பியிருந்தால் சடங்குகளை அருகில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில் வைத்துக்கொள்ளுமாறு அவர்கள் ஆலோசனை கூறியிருப்பார்கள் என்றும் கமலநாதன் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.idris-jusoh

இதனிடையே, கமலநாதனின் கருத்துக்கு பெர்காசா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய சடங்குகளில் தலையிட வேண்டாம் என்று பெர்காசா அமைப்பின் தலைவரான இப்ராகிம் அலி எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.