Home நாடு நான் அஸிஸானை களங்கப்படுத்தவில்லை – முகைதீன் யாசின் மன்னிப்பு கோரினார்!

நான் அஸிஸானை களங்கப்படுத்தவில்லை – முகைதீன் யாசின் மன்னிப்பு கோரினார்!

677
0
SHARE
Ad

Muhyiddinயான், அக் 30 – நாட்டின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் சீனி விலை ஏற்றம் குறித்து துணைப்பிரதமர் முகைதின் யாசின் பேசும் போது, அண்மையில் நீரிழிவு நோயின் காரணமாக மறைந்த முன்னாள் கெடா மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ அஸிஸான் அப்துல் ரசாக்கை கறைபடுத்தும் நோக்கில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இதை மறுத்த முகைதீன், தான் அஸிஸானை கறைபடுத்தும் வகையில் பேசவில்லை என்றும், ஒருவேளை தனது பேச்சு யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் குறிப்பாக அஸிஸானின் குடும்பத்தினரைக் காயப்படுத்தியிருந்தால் தனது மன்னிப்பையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதாக நேற்று அறிக்கை விடுத்தார்.

மேலும், சீனியினால் ஏற்படும் விளைகளை மட்டுமே தான் குறிப்பிட்டதாகவும், அது மறைந்த அஸிஸானை அவமதிக்கும் நோக்கில் அல்ல என்றும் முகைதீன் யாசின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் முகைதீனின் விளக்கத்தை பாஸ் இளைஞர் அணி ஏற்றுக் கொண்டு இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் படி, சீனி விலையில் அரசாங்கம் கொடுத்து வந்த மானியம் நிறுத்தப்பட்டது.

இதனால் சீனி விலை ஏற்றம் குறித்து எதிர்கட்சிகள் பலர் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.

அரசாங்கத்தின் இந்த முடிவிற்கு ஆதரவாகப் பேசிய முகைதீன், சீனியால் வரும் விளைவுகள் குறித்துப் பேசும் போது, அண்மையில் தீவிர நீரிழிவு நோயின் காரணமாக மரணமடைந்த முன்னாள் கெடா மந்திரி பெசார் அஸிஸானை உதாரணமாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.