Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேர்தல்: சோதிநாதன் மீண்டும் உதவித் தலைவருக்குப் போட்டி!

ம.இ.கா தேர்தல்: சோதிநாதன் மீண்டும் உதவித் தலைவருக்குப் போட்டி!

645
0
SHARE
Ad

dato-sothinathanகோலாலம்பூர், நவ 5 – இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக முன்னாள் ம.இ.கா உதவித் தலைவரான டத்தோ எஸ்.சோதிநாதன் இன்று அறிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுடன் எனது முடிவு குறித்து கலந்தாலோசித்து அவரது ஆலோசனையைப் பெற்றேன்.”

“அதேநேரத்தில் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் சமூகத்தின் கருத்துக்களையும் கேட்டறிந்தேன். கட்சியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேசிய உதவித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளேன்.” என்று சோதிநாதன்  அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், கட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தங்களது முடிவுகளை அறிவிக்க கட்சியில் போதுமான ஒற்றுமை இருப்பதால் அதன் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுப்பதாகவும் சோதிநாதன் தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கட்சியின் உதவித் தலைவராக சோதிநாதன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.