Home apponly தண்ணீரில் விழுந்த செல்பேசியை சரி செய்வது எப்படி?

தண்ணீரில் விழுந்த செல்பேசியை சரி செய்வது எப்படி?

625
0
SHARE
Ad

iphone-in-waterநவம்பர் 5 – ஐயோ! வாங்கி 1 மாதம் தானே ஆச்சு … என் விலையுயர்ந்த செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதே என்று வருத்தப்படுகிறீர்களா? இதோ உங்கள் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் செல்பேசியைக் காப்பாற்ற சில அவசரகால  நடவடிக்கைகள்…

தண்ணீரில் முழுவதும் நனைந்துவிட்ட உங்கள் செல்பேசியை என்ன செய்ய வேண்டும்:- 

1. உடனடியாக உங்கள் செல்பேசியை அணைத்து (power off ) விடவும்… Power on  செய்ய முயற்சி செய்ய வேண்டாம்

#TamilSchoolmychoice

2. அதன் SIM card, Memory card மற்றும் Battery ஆகியவற்றை உடனடியாக அகற்றவும் (Battery அகற்ற முடியாத செல்பேசிகளாக இருந்தால் தேவையில்லை)

3. காய்ந்த துணி ஒன்றை எடுத்து கருவியின் மேற்புறத்திலுள்ள நீரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும்

4. காற்று புகாத ஒரு கலனில் (Container) சமைக்காத அரிசியை போட்டு அதில் உங்கள் செல்பேசியை புதைத்து வைக்கவும்.(அரிசிக்கு நீரை உறிஞ்சும் தன்மை உள்ளது) அரிசிக்குப் பதிலாக நீரை உறிஞ்சுவதற்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வேறு பொருட்களையும் பயன்படுத்தலாம்.

5. குறைந்தது 24 மணி நேரத்திற்கு செல்பேசியை அரிசிக்குள் வைக்க வேண்டும்.

இந்த முறையைக் கையாள்வதன் மூலம் பெரும்பான்மையான செல்பேசிகளைக் காப்பாற்றலாம். செல்பேசியின் உள்ளே சென்ற நீரை எவ்வளவு வேகமாக வெளியேற்றுகிறீர்களோ அதை வைத்தே செல்பேசி பழைய நிலையை அடையும்.

செய்யக் கூடாதவைகள் என்ன?

1. Hair drier போன்ற சாதனங்களை உபயோகித்து காய வைக்கக் கூடாது

2. செல்பேசியை Charge செய்யக்கூடாது.

கருவியின் உள்ளே சென்ற நீர் முழுவதும் அரிசியால் உறிஞ்சப்பட்டவுடன் செல்பேசியை மீண்டும் இயக்கிப் பார்த்தால், அது பழைய நிலையை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 

phonedroppedintoilet

 தகவல் மற்றும் படங்கள் – http://www.intomobile.com