Home உலகம் இலங்கை: 350 அடி பள்ளத்தில் பேருந்து உருண்ட விபத்தில் 10 பயணிகள் பலி

இலங்கை: 350 அடி பள்ளத்தில் பேருந்து உருண்ட விபத்தில் 10 பயணிகள் பலி

708
0
SHARE
Ad

_45965057_jex_392493_de27-1

கொழும்பு, நவம்பர் 6-இலங்கை அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று மலைக் குன்றில் இருந்து தடம் விலகி 350 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த விபத்தில் 10 பயணிகள் பலியாகினர்.

மத்திய இலங்கையில் உள்ள பண்டரவேலா என்ற மலைப்பிரதேசம் வழியாக இந்த பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையை விட்டு விலகி மலைக் குன்றில் இருந்து 350 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது.

#TamilSchoolmychoice

இந்த விபத்தில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் என 10 பயணிகள் பரிதாபமாக பலியாகினர்.ஓட்டுநர், நடத்துனர் உள்பட 18 பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.