Home One Line P1 கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள்

கடன் தொல்லையில் சிக்கும் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள்

838
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய் மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தையும் பல்வேறு துறைகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.

தொற்று நோய் பரவுவதால் அமல்படுத்தப்பட்ட கட்டுபாடுகள் காரணாமாக சுற்றுலா பேருந்துகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணிகளை நாட்டின் சுற்றுலா தளங்களுக்கு அழைத்து வருவதன் மூலம் உள்ளூர் சுற்றுலாத் துறையை உயர்த்த உதவிய ‘முன்னணி தொழிலாளர்கள்’ அவர்கள், ஆனால், டிசம்பர் முதல் அவர்களின் தலைவிதி மாறிவிட்டது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்பினால் 10,000- க்கும் மேற்பட்ட பேருந்து உரிமையாளர்கள் சிக்கலில் மாட்டியிருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. பலர் பேருந்து கடனை அடைக்க கடனாளர்களின் அழுத்தத்தைப் பெறுவதாகத் தெரிவித்தது.

பேருந்துகளுக்கு ஆறு மாத கடன் தள்ளுபடி அமல்படுத்தப்படாததால், தொழிலைத் தொடர முடியாதவர்கள் திவாலாகிவிட்டனர் என்று பேருந்து உரிமையாளர் ஒருவர் கூறினார்.

“முடிந்தால், குறைந்த வட்டி விகிதங்களுடன், 1-2 விழுக்காட்டுடன், சுற்றுலா பேருந்து நிறுவனங்களை மறுசீரமைக்க (வங்கி கடன்) நிதி அமைச்சை நாங்கள் கேட்கிறோம். மூன்று அல்லது நான்கு மாதங்களில் நிறுவனம் மூடப்படலாம். கற்பனை செய்து பாருங்கள், ஒரு பேருந்துக்கு 12,000- 13,000 ரிங்கிட் செலவாகும், ”என்று பேருந்து உரிமையாளர் வான் ஷாரி வான் அகமட் பெர்னாமாவிடம் கூறினார்.

பல்கலைக்கழகத்தில் இன்னும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு அனுப்ப பேருந்து சேவையைப் பயன்படுத்துமாறு வான் ஷாரி அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.