மேலும், 693 கொவிட்19 நோயாளிகள் இறந்துள்ளதாகவும், இது பிரிட்டனில் மொத்த கொரொனா தொடர்பான இறப்பு எண்ணிக்கையை 29,427- ஆகக் கொண்டு வந்துள்ளது என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள், பராமரிப்பு இல்லங்கள் உட்பட அனைத்து அமைப்புகளிலும் பதிவு செய்யப்பட்ட இறப்புகள், இந்த புள்ளிவிவரங்களில் அடங்கும்.
முந்தைய நாளில், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தனது சமீபத்திய கொரொனா தொற்று பதிவுசெய்த இறப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மொத்த இறப்பு எண்ணிக்கை 32,000- ஐ கடந்துவிட்டது என்பதை அந்த புள்ளிவிபரம் காட்டுகிறது.
இத்தாலியில் கொரொனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை தற்போது 29,315- ஆக உள்ளது.