Home One Line P1 தனிமைப்படுத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்தனர்

தனிமைப்படுத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்தனர்

875
0
SHARE
Ad

கோலாலம்புர்: கொவிட் -19 சம்பவம் தொடர்பான ஏழு நபர்கள் திங்கட்கிழமை கோலாலம்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தோனிசியா மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்த என்றும், சிலாங்கூர் மென்ஷன், ஒன் சிட்டி கட்டிடம் மற்றும் கம்போங் பாருவைச் சுற்றியுள்ளவர்கள் என்று டி ஸ்டார் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. காலை 10:00 மணியளவில் ரோந்து மருத்துவரால் அவர்கள் இல்லாதது உணரப்பட்டது. மருத்துவமனை தகவல்களின்படி, அவர்கள் மே 7 வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் மஸ்லான் லாசிம் இந்த விஷயத்தை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை மேற்பார்வையிடும் தேசிய பேரிடர் துறை (நாட்மா) விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.