Home நாடு நாடு முழுவதும் இன்று எஸ்.பி.எம் தேர்வு துவங்கியது!

நாடு முழுவதும் இன்று எஸ்.பி.எம் தேர்வு துவங்கியது!

932
0
SHARE
Ad

spmstudentgeorgetownகோலாலம்பூர், நவ 6 –  நாடு முழுவதும் இன்று எஸ்.பி.எம் தேர்வின் முதல் தாளான பாஷா மலாயு துவங்கியது.

எஸ்எம்கே புத்ரி விலாயா பள்ளியில் 125 மாணவர்கள் தேர்வு எழுதுவதை கல்வியமைச்சர் (II) டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூஸோ இன்று மேற்பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இட்ரிஸ், “இந்த வருடம் எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் வரலாறு பாடத்தில் (History) கட்டாய தேர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளார்கள். மலேசியர்கள் அனைவரும் நமது தேசத்தின் வரலாறு குறித்து கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த வருடம் வரலாறு பாடத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், வரும் 2016 ஆம் ஆண்டு ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்படும் என்றும் இட்ரிஸ் குறிப்பிட்டார்.

இன்று நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரையில் நடைபெறும் எஸ்.பி.எம் தேர்வை நாடளவில் 3,616 மையங்களில் 470,395 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இவர்களில் 415,509 பேர் அரசாங்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.