Home உலகம் வீட்டு சிறையில் இருந்த போது மகாத்மா காந்தி எழுதிய அரிய கடிதம் ஏலம்

வீட்டு சிறையில் இருந்த போது மகாத்மா காந்தி எழுதிய அரிய கடிதம் ஏலம்

702
0
SHARE
Ad

index

லண்டன்,பிப்.10- இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது.இங்கிலாந்து ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த போது கடந்த 1943ம் ஆண்டு மகாத்மா காந்தியை புனேவில் உள்ள ஆகா கான் பேலசில் இங்கிலாந்து படையினர் சிறை வைத்தனர்.

அப்போது, பேலசில் இருந்து இங்கிலாந்து அதிகாரிகளுக்கு காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். டைப் செய்யப்பட்ட கடிதத்தில் காந்தி கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார்.

#TamilSchoolmychoice

அதில், என்னை வீட்டு சிறையில் வைத்துள்ளதன் மூலம் அரசுக்கு அநாவசிய செலவு ஏற்படுகிறது. எனவே, என்னையும் சுதந்திர போராட்டக்காரர்களையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிய கடிதம் வரும் 14ம் தேதி ஷிரோப்ஷைர் பகுதியில் உள்ள லுட்லோவில் ஏலம் விடப்படுகிறது.இதுகுறித்து முல்லாக்ஸ் ஏல நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்ட் வெஸ்ட்வுட் கூறுகையில், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காந்தியுடன் நெருக்கமாக இருந்த சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் இந்த கடிதத்தை விற்றுவிட்டார். அந்த கடிதம்தான் இப்போது ஏலம் விடப்படுகிறது என்றார்.